“வரும் கல்வி ஆண்டிலிருந்து... ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கும்” - கல்லூரி கல்வி இயக்குனர்

வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
கல்லூரி கல்வி இயக்குனர்  கார்மேகம்
கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் முகநூல்

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில் 2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான வரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளன. ஒற்றை பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

கல்லூரி கல்வி இயக்குனர்  கார்மேகம்
டாஸ்மாக் மது குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்து.. பிரேமலதா கண்டனம்

அதே போல் இரட்டை பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி, மே 10ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.மே 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்” என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com