\
பாமதி ஐ.ஏ.எஸ்
பாமதி ஐ.ஏ.எஸ்pt web

EXCLUSIVE | வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நடந்ததென்ன? முன்னாள் அதிகாரி பாமதியுடன் சிறப்பு நேர்காணல்!

“காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையினர் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனது அறிக்கை மூலம் விசாரணை நடத்தியது சிபிஐ. நீதி கிடைக்க வேண்டும் என்றால் நேர்மையாக வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்” - தேசிய பழங்குடியினர் ஆணைய தென் மண்டல முன்னாள் இயக்குனர் பாமதி
Published on

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் அப்போதைய தேசிய பழங்குடியினர் ஆணைய தென் மண்டல இயக்குனர் பாமதி ஐ.ஏ.எஸ். அளித்த அறிக்கைதான் தற்போது தீர்ப்பு வழங்க முக்கிய காரணியாக இருந்தது என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை.

பாமதி ஐ.ஏ.எஸ்
வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கு கடந்த வந்த பாதையும், இன்றைய தீர்ப்பு விவரமும்!

அத்தகையை அறிக்கை குறித்து புதிய தலைமுறைக்காக பாமதி ஐ.ஏ.எஸ். அவர்களிடமே சில கேள்விகளை முன்வைத்தோம். அவர், “நான் தனிப்பட்டு வாச்சாத்தி சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்தேன். ஒவ்வொருவரிடமும் தனியாக பேசி உண்மையை அறிக்கையாக அளித்தேன். காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையினர் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனது அறிக்கை மூலம் விசாரணையை நடத்தியது சிபிஐ. நீதி கிடைக்க வேண்டும் என்றால் நேர்மையாக வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியையும் கீழுள்ள இணைப்பில் விரிவாக காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com