“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு

“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு

“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு
Published on

அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனும், ஓபிஎஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் அதிமுக தலைமையில் சீட் கேட்டிருந்தனர். இதில் மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவளாரும் எடப்பாடி அணியை சேர்ந்தவருமான சின்னப்பனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. 

இதில் அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் தான் கட்சியில் வகித்து வந்த தலைமை கழக செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் சுயேட்ச்சையாக களம் காணபோவதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை விளாத்திகுளத்தில் துவங்கினார். விளாத்திகுளத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த, அவருக்கு காலணிகள் சின்னம் ஒதுக்கபட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவரும் மார்க்கண்டேயன், இன்று எட்டயபுரம் அருகே உள்ள பசுவந்தனை, மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான், உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com