கொரோனாவால் அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரிழப்பு!

கொரோனாவால் அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரிழப்பு!

கொரோனாவால் அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரிழப்பு!
Published on

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன்(76) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பா.வெ தாமோதரன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர். மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைத்தலைவராகவும், ஆவின் தலைவராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது.

ஏற்கனவே, கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் உயிரிழந்தார். இந்நிலையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.வெ தாமோதரன், அதிகமான நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com