நண்பனை நினைத்து தேம்பி தேம்பி அழுத கடம்பூர் ராஜூ.. ஆசுவாசப்படுத்தியும் நிற்காத கண்ணீர்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அரசு பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது நண்பனை நினைவு கூர்ந்து பேசியபோது கண் கலங்கினார்.
கண்கலங்கிய கடம்பூர் ராஜூ
கண்கலங்கிய கடம்பூர் ராஜூபுதியதலைமுறை

செய்தியாளர் - மணி சங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

அப்போது, மறைந்த தன் நண்பர் காளிராஜன் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், காளிராஜனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

கண்கலங்கிய கடம்பூர் ராஜூ
சனாதனம் தொடர்பான வழக்கு: அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன்

இதற்கிடையே, மேடையில் பேசிய கடம்பூர் ராஜூ, மறைந்த தனது நண்பர் காளிராஜன் பற்றியும், இருவருக்குள் இருந்த நட்பு குறித்தும் நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார்.

தொடக்கத்திலிருந்தே நா தழுதழுக்க பேசிய அவர், நண்பனை நினைத்து மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், அவரை ஆசுவாசப்படுத்தினர். இருந்தபோதிலும் தனது நண்பர் குறித்து பேசி முடிக்கும் வரை கண்களில் கண்ணீரோடு பேசினார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. கூட்டத்தில் தனது நண்பன் குறித்து உருக்கமாக பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com