மதுரை: “நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல” – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

“என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
OPS
OPSfile

செய்தியாளர்: மணிகண்டபிரபு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்... “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

என்னை பொருத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல நான். கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றிவாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது.

OPS
தேர்தல் ஆணையத்தில் INDIA கூட்டணி சார்பில் மனு.. காரணம் என்ன?

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகிற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்புக் குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் எப்படி இந்த கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com