‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ - சரணடைந்த பிரமுகர்?

‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ - சரணடைந்த பிரமுகர்?

‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ - சரணடைந்த பிரமுகர்?
Published on

கொரோனா பீதி எதிரொலியால், 7 மாதத்திற்கு பிறகு பெண் கடத்தல் வழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவர் சரணடைந்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் பேராசிரியையை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் காரில் கடத்தினார். அந்த பெண் பாதி வழியில் மீட்கப்பட்ட நிலையில், வணக்கம் சோமு தலைமறைவானார்.

கடந்தாண்டு செப்.30ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து, அதிமுக தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது.

இந்நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக அவர் சரண்டைந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com