நாடாளுமன்ற தேர்தலுக்காக வந்து இறங்கிய இயந்திரங்கள்..!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூருக்கு வந்துள்ளன.
நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து தொடர்பாது அடிக்கடி பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் தற்போது அது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓபி.ராவத் நேற்று தெளிவுபடுத்திவிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் திருவாரூருக்கு வந்துள்ளன. பெங்களூருவிலிருந்து 1580 மின்னணு வாக்கு இயந்திரங்கள் திருவாரூரை வந்தடைந்துள்ளன. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் அவைகள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.