ks alagiri - evks elangovanPT web
தமிழ்நாடு
கே.எஸ்.அழகிரி மீது EVKS இளங்கோவன் அதிருப்தி.. காரணம் என்ன?
தமிழக காங்கிரஸில், ஈவிகேஎஸ் இளங்கோவன் - கே.எஸ்.அழகிரி இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
“தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. சென்னையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது. யாரையும் அழைக்காமல் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்தார். அப்போது, “தவறு எங்கு நடந்தது என தெரியவில்லை” என்றும் “இதுதொடர்பாக விசாரிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.