\

திருநாவுக்கரசரை தெரியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி

திருநாவுக்கரசரை தெரியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி
Published on

திருநாவுக்கரசர் யார் என்றே தமக்குத் தெரியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளியின் அறிவுரைப்படி செயல்படும் அரசு, குற்றவாளி அரசே என்று விமர்சித்தார். உள்ளாட்சி தேர்தலை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமதப்படுத்துவதாகவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த இளங்கோவன், அவரை தமக்கு யார் என்றே தெரியாது என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com