மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

‘இந்தியாவில் குற்ற நோக்கமில்லாத செயல்களும் குற்றம்’ - தரவுகளை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா

இந்தியாவில் பின்பற்றப்படும் சட்ட அமைப்பானது கடுமையான குற்றங்களை மட்டுமல்லாமல், சாதாரண தவறுகளையும், குற்ற நோக்கமில்லாத செயல்களையும் கூட குற்றமாகக் கருதி சிறைதண்டனை வரை விதிப்பதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவில் 5,333 வகையான குற்றங்கள் சிறை தண்டணை விதிக்கப்படும் அளவுக்கான குற்றங்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் சிகிச்சை பெறாதது, நீதிமன்றம் கோரிய மாற்றங்களை செய்யாதிருப்பது, விதிமுறைகளை பின்பற்றாதது கூட சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.

அதேபோல, மின்சார உபகரணங்களை நல்ல நிலையில் வைக்காமல் இருந்தால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்கூட சிறை தண்டனை விதிக்கப்படலாம். வருமான வரி விளக்கங்களை சமர்ப்பிக்கத் தவறினால், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பழங்கால பொருட்கள் அல்லது கலை பொருட்களை ஏற்றுமதி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறையும், மாசுபாடு தடுப்பு விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறையும் விதிக்கப்படும். இப்படியாக, இந்தியாவில் சில சட்டங்கள் சிறிய தவறுகளுக்கும் கூட கடுமையான தண்டனைகளை விதிக்கின்றன என `டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிப்படம்
செக் வைக்கும் யூடியூப்: க்ரியேட்டர்களுக்கு சிக்கலா?

குறிப்பாக, 622 வகையான குற்றங்கள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களாகவும், 993 வகை குற்றங்கள் கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களாகவும், முக்கியமாக 301 குற்றங்கள் மரண தண்டனை விதிக்ககூடிய அளவுக்கான குற்றங்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 5,842 குற்றங்கள் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் குற்றங்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இவற்றில் திருத்தம் வேண்டும் எனவும் சட்ட வல்லுநர்கள் கோருகின்றனர்.

மாதிரிப்படம்
வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ஆய்வுகள்.. பூமிக்குத் திரும்பும் சுபான்ஷூ சுக்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com