\
Essential Goods Prices Surge by 20% at TN
Model ImageChat Gpt

அத்தியாவசியப் பொருட்கள் விலை 20% உயர்வு.. வறட்சியால் உற்பத்தி கடும் சரிவு!

விலைவாசியைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ 35 ரூபாய் என மானிய விலையில் அரசே வெங்காயம் விற்பனையைத் தொடங்கியிருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Published on

சென்னையில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலை ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பது மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வழக்கத்தைவிடக் குறைவான அளவில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் அளவுக்கு விலைவாசி உயர்வு சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நீண்ட வறண்ட வானிலையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் போதுமான அளவு மழை பெய்யவில்லை என்றால் காய்கறி விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Model image
Model imageani

குறிப்பாக அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. உளுந்தம் பருப்பு 250 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 235 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் தேங்காய் எண்ணெய் விலை, தற்போது மேலும் உயர்ந்து கிலோ 310 ரூபாய் வரை விற்பனையாகிறது. காய்கறிகளில் கேரட் மற்றும் பீன்ஸ் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், வெங்காயம் 70 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. அதேபோல மிளகாய் 380 ரூபாய், பூண்டு 320 ரூபாய், மிளகு 940 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ 35 ரூபாய் என மானிய விலையில் அரசே வெங்காயம் விற்பனையைத் தொடங்கியிருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com