\
அரசு இணையதளத்தில் இன்னும் சரி செய்யப்படாத பிழை

அரசு இணையதளத்தில் இன்னும் சரி செய்யப்படாத பிழை

அரசு இணையதளத்தில் இன்னும் சரி செய்யப்படாத பிழை
Published on

தமிழக அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கே.பாண்டியராஜனின், துறை பெயரில் உள்ள எழுத்துப் பிழை இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்ததையொட்டி, அரசு இணையதளத்திலும் அமைச்சர்களின் பெயர் பட்டியலில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி மாற்றியமைக்கப்பட்ட இணையதள பக்கத்தில், அமைச்சர் கே.பாண்டியராஜனின் பெயர் மற்றும் துறையின் பெயரில் எழுத்துப் பிழைகள் இருந்தது குறித்து செய்தி வெளியான நிலையில் தற்போது அமைச்சரின் பெயர் மட்டும் திருத்தப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததற்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக அரசு இணையதளத்தில் அவரது பெயர் மற்றும் துறையின் பெயரிலும் எழுத்துப் பிழைகள் இருந்தது குறித்து செய்தி வெளியான நிலையில் தற்போது அமைச்சரின் பெயர் மட்டும் திருத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com