மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி?-திட்டமே வீணாவதாக மின்வாரியம் காட்டம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி?-திட்டமே வீணாவதாக மின்வாரியம் காட்டம்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி?-திட்டமே வீணாவதாக மின்வாரியம் காட்டம்!

வேலை மும்முரமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காக, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி நடந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 97.98% பேர் இணைத்துள்ளனர். ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில், உரிமையாளர் / குத்தகைதாரர் / இணை உரிமையாளரின் ஆதார் எண்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே, அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் காட்டமாக தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது மின்வாரியம். சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே, மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயரதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com