\
ஈரோடு: இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் பலி

ஈரோடு: இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் பலி

ஈரோடு: இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் பலி
Published on: 

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், சிவகாசியைச் சேர்ந்த அபினேஷ் என்பவரும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தருண்ராஜ் என்பவரும் படித்து வந்துள்ளனர். இதில், அபினேஷ் பெருந்துறையில் ரூம் எடுத்து தங்கியும் தருண்ராஜ் கல்லூரி விடுதியில் தங்கியும் வந்துள்ளனர்.

இந்நிலையில் தருண்ராஜ் கிருஸ்துமஸ் விடுமுறையை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து தருண்ராஜின் நண்பரான அபினேஷின் வாகனத்தில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிங்ரோடு சந்திப்பு வளைவில் வரும்போது, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இதில், அபினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில். தருண்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தருண்ராஜும் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் கல்லூரி நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com