ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
Published on

குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி, மாதம் பாளையம் ஊராட்சி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50) கம்ப்யூட்டர் டிசைனரான இவர் தனது மனைவி நித்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு சுற்றுலா சென்ற அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகே வசிக்கும் நண்பரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இளங்கோவன் வீட்டில் வளர்க்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதற்காக அவரது நண்பர் கந்தன் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு காம்பவுண்ட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா ஐ 10 கார் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆய்வு செய்தபோது வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் தங்க நகை, பத்தாயிரம் பணம் மற்றும் ஹோண்டா ஐ 10 கார் திருடு போனது தெரியவந்தது. கொள்ளை குறித்து சுற்றுலா சென்றுள்ள வீட்டின் உரிமையாளர் இளங்கோவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை மற்றும் காரை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com