6 பிரிவுகளின் கீழ் தாய்லாந்து நாட்டினர் மீது ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு

6 பிரிவுகளின் கீழ் தாய்லாந்து நாட்டினர் மீது ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு

6 பிரிவுகளின் கீழ் தாய்லாந்து நாட்டினர் மீது ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு
Published on

ஈரோட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தாய்லாந்து நாட்டினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் சுற்றுலா விசா மூலமாக ஈரோடு வந்து, முறையான அனுமதியின்றி பொள்ளம்பாளையத்தில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் மீது வட்டாட்சியர் பரிமளா தேவி சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அவர்கள் மீது பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவ காரணமாக இருந்தது, பாஸ்போர்ட் விதிமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com