ஈரோடு: வாய்க்கால்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் ஸ்கேன் சென்டர் - மக்கள் அவதி

ஈரோடு: வாய்க்கால்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் ஸ்கேன் சென்டர் - மக்கள் அவதி

ஈரோடு: வாய்க்கால்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் ஸ்கேன் சென்டர் - மக்கள் அவதி
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியில் தனியார் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இதே பகுதியில் குடியிருப்பு பகுதியில் குவியல் குவியலாக கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும் நேரு நகர், கீழ்பவானி கிளை வாய்க்கால் மற்றும் வாய்க்கால் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மருந்து குப்பிகளை எடுத்து விளையாடுகின்றனர். மேலும் அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடும்போது  மருத்துவ கழிவுகள் கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்று கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எனவே மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் குடியிருப்பு பகுதி மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் கொட்டி எரிக்கும் ஸ்கேன் சென்டர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com