ஈரோடு: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் - என்ன காரணம்?

ஈரோடு: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் - என்ன காரணம்?
ஈரோடு: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் - என்ன காரணம்?

ஈரோடு அருகே இறந்துபோன முதியவரின் உடலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் முதியவரின் உடல் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த உதயகுமாரின் தந்தை துரைசாமி என்பது தெரியவந்தது. 70 வயதான துரைசாமி கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இடுகாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு துரைசாமியின் உடல் முட்புதரில் சிக்கியிருந்தது. இதனையடுத்து துரைசாமியின் உடலை அவரது மகன் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அதே பகுதியில் துரைசாமியின் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் உயிரிழந்த முதியவரின் உடல் இரண்டாவது முறையாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com