’பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல’ - ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்

’பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல’ - ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்
’பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல’ - ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்

ஈரோடு அருகே போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் பள்ளி குழந்தைகள், பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பெரும்பள்ளம் ஓடை கரையோரம் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை கடந்த 2016 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அப்புறப்படுத்தி சென்னிமலை ஒன்றியம் வசந்தம் நகரில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இங்குள்ள மாணவ மாணவிகள் செலம்பங்கவுண்டன் பாளையத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று வர ஆசிரியர்களின் ஏற்பாட்டில் வேன் உதவியுடன் பள்ளிக்குச் சென்று வந்ததாகவும், தற்போது வேன் வசதியை நிறுத்தியதால் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். கூலித்தொழில் செய்து வரும் தங்களால் தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லமுடியாது என்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளை தங்கள் பகுதி வழியாக இயக்கினால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனு அளித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com