ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
MP Ganesha murthi
MP Ganesha murthipt desk

செய்தியாளர்: பிரவீண்

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக - கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் மன உளைச்சல் காரணமாக மாத்திரையை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.

எம்.பி. கணேசமூர்த்தி
எம்.பி. கணேசமூர்த்திபுதிய தலைமுறை

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேச மூர்த்தி. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்து வருகிறார். தற்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு. கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சி சார்பில் துரை வைகா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com