ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தல்... முன்னிலை யார்? தட்டித்தூக்கியதா திமுக?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 67.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கையானது காலை 8.20 மணியலளவில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 237 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன. கிட்டதட்ட 78 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 9 மணி நிலவரப்படி:
திமுக ( சந்திரக்குமார்) 8025 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறது.
நாதக (சிதாலட்சுமி) 1081 வாக்குகளையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
முன்னதாக, நாதக வேட்பாளரை போன்று திமுக வேட்பாளர் சந்திரக்குமாரும் திமுக ஏஜெண்டை அனுமதிக்கவில்லை என்று கூறி காவல்துறையிடம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .