காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு யாருக்கு?

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு யாருக்கு?
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு யாருக்கு?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 8.30 மணிக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இந்த முறை முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நேரடியாக வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த வாக்குகள் தபால் வாக்காக கருத்தில் கொள்ளப்படும். 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு பகுதியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. காவல்துறை, துணை ரானுவம் 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெரும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அடையாள அட்டை இல்லாத எந்த முகவரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். வாக்கு எண்ணும் மையத்தில் 600 காவலர்களும் மாநகருக்குள் முக்கிய இடங்களில் 750 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com