
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மேகநாதன். இவரது மனைவி, தனது குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சிவகிரி அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலராக மேகநாதன் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிவையில் இவர் பணி மாறுதல் காரணமாக நேற்று பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு தாண்டாம்பாளையத்தில் இருந்து ஓடாநிலை செல்லும் சாலையில் தனது காரில் மேகநாதன் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரச்சலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.