தமிழ்நாடு
கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர்
கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர்
கந்துவட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பான புகார்களை 0424-2260211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், 780617007 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பலாம் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கிகள் சார்பில் கடன்கள் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.