ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு
Published on

ஈரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் ஜெய்க்குமார். இவர், நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருப்பராயன் கோயில் அருகே வரும்போது கார் நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் உள்ள ஐந்து அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அவ்வழியில் சென்று கொண்டிருந்தவர்கள் காரில் சிக்கியிருந்த ஜெயக்குமாரை மீட்டனர். ஆனால் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com