திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்.. ஈரோடு கிழக்கில் காலை முதல் நடந்தது என்ன? - தொகுப்பு

திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்.. ஈரோடு கிழக்கில் காலை முதல் நடந்தது என்ன? - தொகுப்பு
திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்.. ஈரோடு கிழக்கில் காலை முதல் நடந்தது என்ன? - தொகுப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற ஆர்வத்துடன் வந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு:

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த்ன், கட்சியின்ட அடையாளமான துண்டு மற்றும் கட்சி வேட்டியை அணிந்து கொண்டு ஈ அக்ரஹாரம் வாக்குச் சாவடிக்கு வந்தார். அப்போது அதிகாரிகள், துண்டி மற்றும் வேட்டியை கழற்ற வேண்டுமென்று தெரிவித்தனர். இதையடுத்து தேமுதிக வேட்பாளர் ஆனந்த், வாக்குச் சாவடியில் உள்ள கழிவறையில் வேட்டியை மாற்றிக்கொண்டு பின்னர் சென்று வாக்களித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு இளைஞர்களும் பொதுமக்களும் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும். மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாய்ப்பு தர வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது. காலை முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடியில் கட்சி சார்ந்தவைகள் இருக்கக் கூடாது என நோடல் அலுவலர் தெரிவித்த இதே விதி அனைத்து வாக்குச் சாவடியிலும் கடைப்பிடிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டேன் என்றார்.

வாக்குப்பதிவு அமைதியான முறையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படும் கோளாரை சரிசெய்ய தயார் பெல் இஞ்சினியர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

வாக்குப் பதிவு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது

”இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவையான அறிவுரைகள் வாக்குச் சாவடிக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் வாக்குச்சாவடியில் நடக்கும் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு விதிமீறல் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் ஐஆர்டிடி-க்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்” என்றார் தேர்தல் அலுவலர் சிவக்குமார்.

ஈரோடு இடைத்தேர்தல்: ஆதார் அட்டை ஏற்க மறுத்ததாக புகார்

கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த சிவகாமி என்ற வாக்காளரிடம் ஆதார் அட்டை ஏற்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து கூடுதலாக 12 ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் அட்டை ஏற்க மறுத்ததாக புகார்.

விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார்:

அதேபோல் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அடையாள மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்தது. இதையடுத்து சரி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். பெரியண்ணா வீதி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்துவதை முகவர் ஒருவர் பார்த்ததாக சக முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அலுவலர் பெட்டி மறைப்பானை சரி செய்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி:

80 விழுக்காடு மக்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுவாக்கவும், ராகுல் காந்தியின் தியாக நடைப்பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும். எதிர்க் கட்சியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். எதிர்க் கட்சியினர் வெற்றிபெற முடியாது என்ற காரணத்தால் தொடர்ந்து விமர்சனங்களை வீசி வருகின்றனர்” என தெரிவித்தார்.

விரலில் மை வைக்காமல் வாக்களித்த பெண் வாக்காளர்:

கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் கோவில் வாக்கு மையத்தில் மை வைக்காமலேயே பெண் ஒருவர் வாக்களித்துள்ளார். 124-வது வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் மை வைக்கத் தவறியதால், முன்கூட்டியே பெண் ஒருவர் வாக்களித்தார், இதையடுத்து வாக்காளர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வாக்களித்த பிறகு மீண்டும் வாக்காளருக்கு மை வைக்கப்பட்டது

இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படிள 238 வாக்குச் சாவடிகளில் 10.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 12,679 பேரும், பெண் வாக்காளர்கள் 10,294 என மொத்தம் வாக்காளர்கள் 22,973 பேர் வாக்களித்துள்ளனர்.

திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்

அத்துடன் பெரியார் நகர் பகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பணப்பட்டுவாடா புகார்!

தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி எண் 138, 139ல் பணப்பட்டுவாடா என அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com