ஈரோடு இடைத்தேர்தல்: திமுகவிற்கு கிடைத்தது போலியான வெற்றி - ஜெயக்குமார் விமர்சனம்

ஈரோடு இடைத்தேர்தல்: திமுகவிற்கு கிடைத்தது போலியான வெற்றி - ஜெயக்குமார் விமர்சனம்
ஈரோடு இடைத்தேர்தல்: திமுகவிற்கு கிடைத்தது போலியான வெற்றி - ஜெயக்குமார் விமர்சனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை, 400 கோடி ரூபாய் வரையிலும் செலவழித்து திமுகவிற்கு கிடைத்த ஒரு போலியான வெற்றி தான், ஆனால், அதிமுகவிற்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார்...

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பா.வளர்மதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;, ஆட்சி அமைத்து 22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தை ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் செலவு செய்துள்ளனர், அதற்கு கிடைத்த வெற்றி தான் அது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரை ஆளும் திமுக அரசுக்கு மிகப்பெரிய பயம், எந்த தேர்தலிலும் இதுபோன்று அவர்கள் பயந்ததில்லை. இந்த தேர்தலில் தான் பயந்து 350 கோடி செலவு செய்து ஒரு போலியான வெற்றியை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உண்மையிலேயே ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது, விடியா அரசு பெற்றிருப்பது போலியான வெற்றி. 400 கோடி ரூபாய் வரையிலும் செலவழித்து கிடைத்த போலியான வெற்றி தான் இது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரை எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான்.

ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என அண்ணாமலை குறிப்பிடவில்லை. அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றாகதான் உள்ளோம். ஒருங்கிணைந்து தான் உள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் சோதனையும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். வாக்காளர்களை ஆடு மாடுகளை போல அடைத்து வைத்தது திமுக. அதிமுக கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக திமுகவினர் பணம் கொடுத்தனர்.

இதையெல்லாம் தாண்டி 43 ஆயிரம் வாக்குகளை அதிமுக பெற்றிருப்பது திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் ஏமாற்றம் தான். திருமங்கலம் ஃபார்முலா போல ஈரோடு கிழக்கு ஃபார்முலா தான் தற்போது புதுசு. மக்களை அடைத்து வைத்த யுக்தியை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை. திமுக வெற்றி கோழையான வெற்றி. இந்த வெற்றியின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். சசிகலா அவரின் கடமையை செய்யட்டும். எங்களை விடுத்துவிட்டு டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com