\
“தாயே எங்களை நரபலி கொடுக்க பார்க்கிறார்” - காவல் கண்காணிப்பாளரிடம் சிறுவர்கள் புகார்

“தாயே எங்களை நரபலி கொடுக்க பார்க்கிறார்” - காவல் கண்காணிப்பாளரிடம் சிறுவர்கள் புகார்

“தாயே எங்களை நரபலி கொடுக்க பார்க்கிறார்” - காவல் கண்காணிப்பாளரிடம் சிறுவர்கள் புகார்
Published on

தங்களது தாயும், அவரது தோழியும் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ரஞ்சிதம் தம்பதிக்கு, 15 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இந்துமதி என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்ட ராமலிங்கம், இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்துமதியின் தோழி தனலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய ரஞ்சிதம், அவரோடு தனியே வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வீட்டில் இருந்து தப்பித்து பாட்டி வீட்டில் தஞ்சமடைந்த சிறார்கள் இருவரும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனலட்சுமியுடன் சேர்ந்து தாய் ரஞ்சிதம் தங்களை கொடுமைப் படுத்துவதாகவும், நரபலி கொடுக்கப்போவதாக பேசிக் கொண்டதாகவும் சிறுவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com