ஈரோடு: பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை

ஈரோடு: பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை

ஈரோடு: பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
Published on

ஈரோடு பேருந்து நிலையம் உள்பட மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து மோப்ப நாய் 'பவானி', மெட்டல் டிடக்டர் உள்ளிட்ட கருவிகள் கொண்டு பேருந்துகள், பயணிகளின் உடமைகள், வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போலீசார், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com