பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாpt desk

ஈரோடு | பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா - வீதியுலா வந்த அம்மனுக்கு உற்சாக வரவேற்பு

பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி வீதியுலா வந்த சப்பரத்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Published on

செய்தியாளர்: டி.சாம்ராஜ்

பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில்குண்டம் விழா திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து கோயிலில் இருந்து புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசர் சிக்கரம்பாளையம் வந்தடைந்தது. முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் தண்ணீர் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அம்மனை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. பெண்கள் தேங்காய் பழம் வைத்து அம்மன் அருள் வேண்டினார். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனை, மக்கள் சிறப்பான வரவேற்றனர். அங்குள்ள கோவிலில் சப்பரம் வைத்து மக்கள் வணங்கினர். கிராம வீதியுலா முடிந்து சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
திடீர் டெல்லி பயணம்.. அமித் ஷாவை சந்தித்தார் இபிஎஸ்!

இந்நிலையில், தொடர்ந்து வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை வெள்ளியம்பாளையம் புதூர்,அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் உள்ளிட்ட 50க்கும் கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com