நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலிpt desk
தமிழ்நாடு
ஈரோடு | நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி – விவசாயி வேதனை
ஈரோடு அருகே விவசாயிக்குச் சொந்தமான ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் உயிரிழந்த நிலையில், மூன்று ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் பனங்காட்டைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு இன்று காலை மேய்ச்சலுக்கு திறந்து விடச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் ஆங்காங்கே உயிரிழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர், பட்டியில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது பட்டிக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளன. இதில், மொத்தம் 14 ஆடுகள் உயிரிழந்தும் மூன்று ஆடுகள் காயமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து சென்னிமலை காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுததியது.