மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொண்ட நிலையில் மீட்கப்பட்ட மருத்துவர்-ஈரோட்டில் பரபரப்பு

மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொண்ட நிலையில் மீட்கப்பட்ட மருத்துவர்-ஈரோட்டில் பரபரப்பு

மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொண்ட நிலையில் மீட்கப்பட்ட மருத்துவர்-ஈரோட்டில் பரபரப்பு
Published on

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் மருத்துவர் சக்திவேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக பணியாற்றி வரும் இவர், இன்று அவரது அறையில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொண்ட நிலையில் கிடந்துள்ளார். பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுப்பிவைத்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com