விறு விறுப்பாக வாக்கு சேகரிக்கும் அதிமுக – பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாததால் சர்ச்சை

விறு விறுப்பாக வாக்கு சேகரிக்கும் அதிமுக – பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாததால் சர்ச்சை
விறு விறுப்பாக வாக்கு சேகரிக்கும் அதிமுக – பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாததால் சர்ச்சை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் ஏற்கனவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று முதல் அதிமுக வாக்கு சேகரிப்பை துவங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி யுவராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் மற்றும் மருங்காபுரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை போல ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் தென்னரசு என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைவர்களுடைய புகைப்படங்கள் அதில் இடம் பெறவில்லை.

தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் நோட்டீஸில் இடம் பெற்றுள்ள நிலையில், பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com