தயாநிதி மாறன் - EPSpt desk
தமிழ்நாடு
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகிறார் இபிஎஸ்!
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக உள்ளார்.
செய்தியாளர்: V.M.சுப்பையா
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை’ எனக் கூறி இருந்தார்.
EPSptweb
இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சீனியர்கள் |"ரஜினி கேட்டது முக்கியமான கேள்வி..திமுக இதை கடந்து போகக்கூடாது" - பத்திரிகையாளர் பிரியன்
இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக உள்ளார்.