கரூரில் வைத்தே செந்தில் பாலாஜியை சம்பவம் பண்ண இபிஎஸ்! என்ன சொன்னார் தெரியுமா? #Video

கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், செந்தில் பாலாஜியை கடுமையாக சாடினார்.
கரூர் - செந்தில் பாலாஜி - இபிஎஸ் - ஸ்டாலின்
கரூர் - செந்தில் பாலாஜி - இபிஎஸ் - ஸ்டாலின்முகநூல்

கரூர் தோரணக்கல்பட்டியில், நாடாளுமன்ற கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேல் என்பவருக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு, தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கரூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி
கரூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமிட்விட்டர்

அதில் கலந்துகொண்டு செந்தில் பாலாஜி குறித்து பேசிய இபிஎஸ்,

“நாடு முழுவதும் தினசரி ஒரு கோடி மது பாட்டில்கள் விற்பனையாகின்றன. அதில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் விகிதம் தினசரி 10 கோடி ரூபாய் வசூல் செய்து, அதனை யாருக்கு கப்பம் கட்ட வேண்டுமோ அவருக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தார் அவர். இதனால் செந்தில் பாலாஜியை, பத்து ரூபாய் பாலாஜி என்பார்கள்.

கரூர் - செந்தில் பாலாஜி - இபிஎஸ் - ஸ்டாலின்
"நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி மாறுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அவர் இதுவரை ஐந்து கட்சிகளில் இருந்துள்ளார். அவரை செயல்வீரர் என ஸ்டாலின் அழைக்கிறார். அந்த செயல்வீரர் இப்போது சிறையில் இருக்கிறார்” என்றார் காட்டமாக.

இபிஎஸ் பேசும்போது, செந்தில் பாலாஜி எப்படிபட்டவர், அவர்மீது என்ன என்ன வழக்குகள் உள்ளன என்பது குறித்து கடந்தகாலத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய விமர்சனமும், மு.க.ஸ்டாலின் குறித்து சட்டமன்றத்தில் கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி பேசிய விமர்சனமும் மேடையின் அருகே இருந்த எல்ஈடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com