EPSpt desk
தமிழ்நாடு
தேர்தல் பத்திரம்: “ரூ.509 கோடி பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - இபிஎஸ்
“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து 509 கோடி ரூபாய் பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், “சூதாட்டம், லாட்டரி தொழிலில் உள்ள மார்ட்டினின் நிறுவனத்திடம் 509 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக பெற்றது அம்பலமாகியுள்ளது.
central gov., electoral bonds, supreme courttwitter
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக வலுவற்ற சட்டமியற்றிய திமுக, சூதாட்ட நிறுவனத்திடம் பணம் வாங்கியது வெட்கக்கேடு. அதிமுக ஆட்சியில் லாட்டரி சீட்டு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளோம்.
மக்களின் உழைப்பை சுரண்டி உயிரை குடிக்கும் பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு உரிய பாடத்தை நடாளுமன்றத் தேர்தலில் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.