”நீட் தேர்வு விவகாரத்தில் இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா விடியல் அரசு?” - இபிஎஸ் காட்டம்

”நீட் தேர்வு விவகாரத்தில் இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா விடியல் அரசு?” - இபிஎஸ் காட்டம்
”நீட் தேர்வு விவகாரத்தில் இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா விடியல் அரசு?” - இபிஎஸ் காட்டம்

நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் அறிக்கையில், ‘’ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை ரத்துசெய்ய வழி தெரியும் எனக்கூறிய ஸ்டாலின் தன் இயலாமையை மறைக்க என்மீது பழிபோடுகிறார். ஓராண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு கேட்டும், நீட் தேர்வில் நிரந்த விலக்கு கேட்டும் அதிமுக போராடியது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடியானதற்கு நீட் தேர்வே ரத்தானது போல் அறிக்கைவிடுகிறார் முதல்வர். எதிர்க்கட்சியான பிறகும் எங்களை பாஜகவின் பாதம் தாங்கி என நாகரிகம் இன்றி நஞ்சை கக்கி இருக்கிறார்.

நீட் முதல் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக வைத்து செயல்பட்டோம். நீட் விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்கள் வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com