மதுரையில் மாநாடு.. இலட்சினை வெளியீடு.. அடுத்தடுத்த திட்டங்களுடன் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கான இலட்சினையை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இபிஎஸ்
இபிஎஸ்

இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பூத் கமிட்டி அமைப்பது போன்ற பணிகளை மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அப்பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் இபிஎஸ் விவாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கையை பொறுத்தவரை, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை அறிவுறுத்தி இருந்தது. தற்போது வரை புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்தும் இபிஎஸ் விவாதிபார் என்றும் கணிக்கப்படுகிறது.

இலட்சினை வெளியீடு
இலட்சினை வெளியீடு

மதுரை மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரை மாநாட்டுக்கான இலட்சினை வெளியிடப்பட்டது. பொன்விழா எழுச்சி மாநாடு என குறிப்பிடப்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடக்க இருப்பதாகவும் இலட்சினையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com