`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’- இபிஎஸ் கேள்வி

`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’- இபிஎஸ் கேள்வி

`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’- இபிஎஸ் கேள்வி
Published on

`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’ என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அவருடன் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மற்றும் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணா முரளி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அய்யா துரைபாண்டியன் தலைமையில் சுமார் 10 ஆயிரம் பேர், கழகத்தில் இணைய உள்ளனர். முன்னோட்டமாக அவரது தலைமையில் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இன்று இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது இதயபூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. இவ்வழக்கில் சிலர் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கவில்லை. அதனைக் கேட்ட நீதி அரசர், விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். மற்றபடி தடை ஆணை பிறப்பிக்கவில்லை. பொதுச்செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “திமுக ஆட்சி மெத்தனமாக நடந்து வருகிறது. நாங்கள் செய்த திட்டப் பணிகளை திறந்து வைத்து வருகிறார்கள். பெரிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்துள்ளனர். சட்ட கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்து வருகிறார்கள் முடிவுற்ற பணிகளைத்தான் திறந்து வைக்கிறார்கள். கோவையில் சுமார் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் அறிவித்துள்ளனர். ஆனால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. காரணம் கமிஷன் அதிகம் கேட்பதாக தெரிவிக்கின்றனர். இப்படியான காரனங்களால், திமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. 2021ம் ஆண்டு பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் திமுக எதையும் நிறைவேற்றவில்லை.

மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். 53 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இல்லை துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நீட் ரத்து செய்யப்படவில்லை.

நாங்கள் காவிரி பிரச்சனையின் போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து போராடினோம். காவிரி நதிநீர் பிரச்னைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். ஆனால் தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா? நீட் தேர்விற்கு பாராளுமன்றத்தில் எந்த குரலும் தெரிவிக்கவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com