தமிழ்நாடு
“கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு..!” - EPS விமர்சனம்
“மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநாகராட்சி முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை பெருவெள்ளத்திற்கு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”கனமழை பெய்து 5 நாட்களாகியும் சில இடங்களில் நீர் வடியவில்லை. ஆனால் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய்க்கூறி வருகின்றனர். 2,400 கி.மீ-க்கு வடிகால் அமைக்கும் திட்டத்தை கொண்டுவந்தது அதிமுக. மழைநீர் வடிகால் பணிகளை தற்போதைய அரசு தாமதப்படுத்தியதுதான் பாதிப்பு அதிகமானதற்கு காரணம். மாநகராட்சி முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை” என விமர்சித்துள்ளார்.