\
தொடரும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்: தேர்தல் ஆணையம் பரிசீலணை

தொடரும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்: தேர்தல் ஆணையம் பரிசீலணை

தொடரும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்: தேர்தல் ஆணையம் பரிசீலணை
Published on

இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்துவருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு புகாரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலில், `ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இரண்டு பக்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

விரைவில் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக முடிவெடுக்கும். நோட்டீஸ்சுக்கு பதில் கிடைத்தபிறகு, தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரம் அளிக்கப்படும். விதிகளின்படி தேர்தல் ஆணையம் செயல்படும்’ என தகவல் தெரிவித்துள்ளனர்.

- செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com