மூத்த மருத்துவர் குகானந்தம் காலமானார்!

தமிழ்நாடு அரசின் கோவிட் பெருந்தொற்று தடுப்பு நிபுணர் குழுவின் உறுப்பினரும், மாநில எய்ட்ஸ்கட்டுப்பாட்டு சங்கத்தின் முன்னாள் திட்ட அதிகாரியுமான மூத்த மருத்துவர் குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார்.
மூத்த மருத்துவர் குகானந்தம்
மூத்த மருத்துவர் குகானந்தம்புதிய தலைமுறை

தமிழ்நாடு அரசின் கோவிட் பெருந்தொற்று தடுப்பு நிபுணர் குழுவின் உறுப்பினரும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் முன்னாள் திட்ட அதிகாரியுமான மூத்த மருத்துவர் குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

சென்னை மாநகராட்சின் முன்னாள் நகர் நல அலுவலர், சிம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவத்துறை தலைவர், யூனிசெப் அமைப்பின் மூத்த மருத்துவ ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை மருத்துவர் குகானந்தம் வகித்து வந்தார். காலரா தடுப்பு குறித்த மருத்துவர் குகானந்தத்தின் நூல், உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. சென்னை கொளத்தூரில் வசித்து வந்த மருத்துவர் குகானந்தம் உடல்நலக்குறைவால் காலமானார்.

மூத்த மருத்துவர் குகானந்தம்
சட்டப்பேரவையில் அமளி - ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள், ஆளுநருடன் சந்திப்பு!

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்றும், கீழ்ப்பாக்கம் கல்லறையில் உடல்நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர் குகானந்தம் உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com