தகுந்த காரணங்கள் இருந்தால் இபாஸ் வழங்கப்படும் : அமைச்சர் வேலுமணி

தகுந்த காரணங்கள் இருந்தால் இபாஸ் வழங்கப்படும் : அமைச்சர் வேலுமணி

தகுந்த காரணங்கள் இருந்தால் இபாஸ் வழங்கப்படும் : அமைச்சர் வேலுமணி
Published on

தகுந்த காரணங்களைக் கொண்டு இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இபாஸ் முறை அமலில் இருந்து வருகிறது. இதனிடையே மண்டலங்களாக விரிவுபடுத்தப்பட்ட இபாஸ் முறை கொரோனா பரவலைத்தொடர்ந்து மீண்டும் மாவட்ட வாரியாக குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இபாஸ்க்கு விண்ணப்பித்தால் அனுமதி கிடைக்கவே இல்லை என்ற புகாரும் எழுந்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில், தகுந்த காரணங்களைக் கொண்டு இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், ‌இ பாஸ் தொடர்பாக நிறைய புகார்கள் முதலமைச்சருக்கு வந்துள்ளதாகவும் உடனடியாக தகுந்த காரணங்களோடு விண்ணப்பிப்பவர்களுக்கு பாஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com