எண்ணூர் முகத்துவாரம் எண்ணெய் கழிவுகள் கலப்பு; புதிய தலைமுறை ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகள் கலந்த நிலையில் புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கூடத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட கடல்பகுதி
எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட கடல்பகுதிpt web

செய்தியாளர் - பாலவெற்றிவேல்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் பெரும் எதிர்வினையாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் அதிக அளவு கச்சா எண்ணெய் கசடுகள் கலந்துள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இங்கு கலந்துள்ள கச்சா எண்ணெய் குறித்து புதிய தலைமுறை மாதிரிகளை சேகரித்து பிரத்யேகமாக ஆய்வு நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை

எண்ணூரில் இரண்டு இடங்களில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டுக்குப்பம் கிராமத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் ஒரு மாதிரியும், நெட்டுக்குப்பம் கிராமத்தில் கொசஸ்தலை முகத்துவாரத்தில் இன்னொரு மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 முதல் 5 வரை கச்சா எண்ணெய் கடலில் கசிந்த நிலையில், டிசம்பர் 13 ஆம் தேதி இந்த மாதிரிகளை நாம் சேகரித்திருந்தோம். காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய இரண்டு இடங்களில் சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகளை தமிழ்நாடு டெஸ்ட் ஹவுஸ் ஆய்வகத்தில் கொடுத்து சோதித்தோம். நீரில் கச்சா எண்ணெய் கசிவு கலந்தது பற்றி அறிய இந்த 2 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 3 வித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வேதியியல் பகுப்பாய்வு, ஆவியாகும் கரிம கலவைகள் ஆய்வு, பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆய்வில், உயிர்கள் வாழ முடியாத அளவிற்கு முகத்துவாரம் மாசுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு லிட்டருக்கு 866 மில்லிகிராம் அளவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது.

கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நைட்ரேட் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டதை விட மிக அதிகம் இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. மொத்த பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன் அளவு 3239 துகள் பில்லியன் என்கிற அளவுக்கு அதிகரித்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கசிவு கடலில் கலந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

மாதிரி 1:  காட்டுக்குப்பம் கிராமம்

ஆய்வுகள் எடுக்கப்பட்ட பகுதி: பக்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் இருந்து 15 மீட்டர்கள் தொலைவில்...

எடுக்கப்பட்ட தேதி : டிசம்பர் 13

எண்ணெய் கலந்த நாள் - டிசம்பர் 4 முதல் 5 வரை

ஆய்வகத்தின் பெயர் : தமிழ்நாடு டெஸ்ட் ஹவுஸ்

வேதியியல் பகுப்பாய்வு - இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - ஆய்வு முடிவுகள்: அளவு - ஒரு லிட்டர்

1) pH மதிப்பு

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்): 5.5 முதல் 9

ஆய்வு முடிவுகள் - 6.95

தன்மைகள் : இயல்பு

2) மொத்த கரைந்த திடப்பொருள்கள் (Total Dissolved Solids)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்): அதிகபட்சம் 500

ஆய்வு முடிவுகள் - 978 மில்லி கிராம்

தன்மைகள் : 1.9 மடங்கு அதிகம்

3) தோற்ற ஆய்வு (Apperance) - கருப்பு நிறம்

4) கடத்துத்திறன் ( Conductivity ) :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 2250

ஆய்வு முடிவுகள் - 2026

தன்மைகள் : இயல்பு

5) எண்ணெய் மற்றும் கிரீஸ் (Oil and Grease) :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 10 மில்லிக்கிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் -770 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 77 மடங்கு அதிகம்

6) கால்சியம் கார்பனேட் :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 200 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 424 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 2.2 மடங்கு அதிகம்

7) மக்னீசியம் :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 30 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 51.54 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 1.7 மடங்கு அதிகம்

8) கால்சியம்

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 75 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 84.97

தன்மைகள் : 1.2 மடங்கு அதிகம்

9) இரும்பு

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.3 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 40.2 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 133 மடங்கு அதிக

10) நைரேட்ஸ்

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 45 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 1803

தன்மைகள் : 928 மடங்கு அதிகம்

ஆவியாகும் கரிம கலவைகள் ஆய்வு :

1) ஓ-சைலேன் (o-Xylene) - அளக்க முடியவில்லை

2) ஸ்டைரீன் (Styrene) - 24.93 மில்லிகிராம் / லிட்டர்

3) எத்தில்பென்சீன் (Ethylbenzene) - 31.06 மில்லிகிராம் / லிட்டர்

4) குளோரோபென்சீன் (Chlorobenzene) - அளக்க முடியவில்லை

5) குளோரோஃபார்ம் ( Chloroform ) - அளக்க முடியவில்லை

6) பென்சீன் ( Benzene ) - 19.81 மில்லிகிராம் / லிட்டர்

7) டோலுயீன் ( Toluene ) - 12.62 மில்லிகிராம் / லிட்டர்

8) கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) - அளக்க முடியவில்லை

பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள் ஆய்வு : (பாலிரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள்)

[ அளவீடு : பில்லியனில் ஒரு துகள் ]

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.1

ஆய்வு முடிவுகள் -787.1

தன்மைகள் : 7870 மடங்கு அதிகம்

1) நாப்தலீன் (Naphthalene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 10

ஆய்வு முடிவுகள் - 34.44

தன்மைகள் : 3.4 மடங்கு அதிகம்

2) அசெனாப்திலீன் ( Acenaphthylene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 5

ஆய்வு முடிவுகள் - 116.38

தன்மைகள் : 23 மடங்கு அதிகம்

3) அசெனாப்தீன் ( Acenaphthene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 20

ஆய்வு முடிவுகள் -35.404

தன்மைகள் : 1.7 மடங்கு அதிகம்

4) புளோரின் ( Fluorene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 71.009

தன்மைகள் - 1.5 மடங்கு அதிகம்

5) பெனாந்த்ரீன் ( Phenanthrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 96.051

தன்மைகள் - 1.9 மடங்கு அதிகம்

6) ஆந்த்ராசீன் ( Anthracene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 105.71

தன்மைகள் - 2 மடங்கு அதிகம்

7) பைரீன் ( Pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 121.604

தன்மைகள் - 2.4 மடங்கு அதிகம்

8) புளோரன்தீன் ( Fluoranthene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 88.853

தன்மைகள் - 1.7 மடங்கு அதிகம்

9) கிரிசீன் ( Chrysene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 26.288

தன்மைகள் - 13,140 மடங்கு அதிகம்

10) பென்ஸ்[a]ஆந்த்ராசீன் ( Benz[a]anthracene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 36.563

தன்மைகள் - 18,000 மடங்கு அதிகம்

11) பென்சோ[a]பைரீன் ( Benzo[a]pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 2.972

தன்மைகள் - 1450 மடங்கு அதிகம்

12) பென்சோ[b]புளோரன்தீன் ( Benzo[b]fluoranthene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 13.99

தன்மைகள் -

13) பென்சோ[g,h,i]பெரிலீன் (Benzo[g,h,i]perylene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 4.883

தன்மைகள் - 2440 மடங்கு அதிகம்

14) டிபென்ஸ்[a,h]ஆந்த்ராசீன் ( Dibenz[a,h]anthracene )

- அளக்க முடியவில்லை

15) இண்டெனோ[1,2,3-சிடி]பைரீன் ( Indeno[1,2,3-cd]pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 6.533

தன்மைகள் - 3276 மடங்கு அதிகம்

மாதிரி 2 : நெட்டுக்குப்பம் கிராமம்

ஆய்வுகள் எடுக்கப்பட்ட பகுதி: கோசஸ்தலை முகத்துவார கரையோரத்தில் இருந்து 20 மீட்டர்கள் தொலைவில்...

எடுக்கப்பட்ட தேதி : டிசம்பர் 13

எண்ணெய் கலந்த நாள் - டிசம்பர் 4 முதல் 5 வரை

ஆய்வகத்தின் பெயர் : தமிழ்நாடு டெஸ்ட் ஹவுஸ்

வேதியியல் பகுப்பாய்வு - இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - ஆய்வு முடிவுகள்: அளவு - ஒரு லிட்டர்

1) pH மதிப்பு

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்): 5.5 முதல் 9

ஆய்வு முடிவுகள் - 7.84

தன்மைகள் : இயல்பு

2) மொத்த கரைந்த திடப்பொருள்கள் (Total Dissolved Solids)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்): அதிகபட்சம் 500

ஆய்வு முடிவுகள் - 2430 மில்லி கிராம்

தன்மைகள் : 5 மடங்கு அதிகம்

3) தோற்ற ஆய்வு (Apperance) - கருப்பு நிறம்

4) கடத்துத்திறன் ( Conductivity ) :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 2250

ஆய்வு முடிவுகள் - 4884

தன்மைகள் : 1.7 மடங்கு அதிகம்

5) எண்ணெய் மற்றும் கிரீஸ் (Oil and Grease) :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 10 மில்லிக்கிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் -866 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 86 மடங்கு அதிகம்

6) கால்சியம் கார்பனேட் :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 200 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 636 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 3.2 மடங்கு அதிகம்

7) மக்னீசியம் :

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 30 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 90.19 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 3 மடங்கு அதிகம்

8) கால்சியம்

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 75 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 106.21

தன்மைகள் : 1.3 மடங்கு அதிகம்

9) இரும்பு

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.3 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 44 மில்லிகிராம் / லிட்டர்

தன்மைகள் : 146 மடங்கு அதிகம்

10) நைரேட்ஸ்

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 45 மில்லிகிராம் / லிட்டர்

ஆய்வு முடிவுகள் - 141.4

தன்மைகள் : 3.5 மடங்கு அதிகம்

ஆவியாகும் கரிம கலவைகள் ஆய்வு :

1) ஓ-சைலேன் (o-Xylene) - அளக்க முடியவில்லை

2) ஸ்டைரீன் (Styrene) - 33.62 மில்லிகிராம் / லிட்டர்

3) எத்தில்பென்சீன் (Ethylbenzene) - 48.14 மில்லிகிராம் / லிட்டர்

4) குளோரோபென்சீன் (Chlorobenzene) - அளக்க முடியவில்லை

5) குளோரோஃபார்ம் ( Chloroform ) - 18.19 மில்லிகிராம் / லிட்டர்

6) பென்சீன் ( Benzene ) - 26.54 மில்லிகிராம் / லிட்டர்

7) டோலுயீன் ( Toluene ) - 55.36 மில்லிகிராம் / லிட்டர்

8) கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) - அளக்க முடியவில்லை

பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள் ஆய்வு : (பாலிரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள்)

[ அளவீடு : பில்லியனில் ஒரு துகள் ]

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.1

ஆய்வு முடிவுகள் -3239.95

தன்மைகள் : 32,390 மடங்கு அதிகம்

1) நாப்தலீன் (Naphthalene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 10

ஆய்வு முடிவுகள் - 1556.31

தன்மைகள் : 155 மடங்கு அதிகம்

2) அசெனாப்திலீன் ( Acenaphthylene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 5

ஆய்வு முடிவுகள் - 109.058

தன்மைகள் : 21 மடங்கு அதிகம்

3) அசெனாப்தீன் ( Acenaphthene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 20

ஆய்வு முடிவுகள் -273.372

தன்மைகள் : 13 மடங்கு அதிகம்

4) புளோரின் ( Fluorene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 336.89

தன்மைகள் - 6.2 மடங்கு அதிகம்

5) பெனாந்த்ரீன் ( Phenanthrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 351.224

தன்மைகள் - 7 மடங்கு அதிகம்

6) ஆந்த்ராசீன் ( Anthracene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 67.82

தன்மைகள் - 1.2 மடங்கு அதிகம்

7) பைரீன் ( Pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 14.521

தன்மைகள் - இயல்பு நிலை

8) புளோரன்தீன் ( Fluoranthene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 50

ஆய்வு முடிவுகள் - 159.92

தன்மைகள் - 3 மடங்கு அதிகம்

9) கிரிசீன் ( Chrysene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 100.551

தன்மைகள் - 50,000 மடங்கு அதிகம்

10) பென்ஸ்[a]ஆந்த்ராசீன் ( Benz[a]anthracene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 111.403

தன்மைகள் - 55,500 மடங்கு அதிகம்

11) பென்சோ[a]பைரீன் ( Benzo[a]pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 21.331

தன்மைகள் - 10,675 மடங்கு அதிகம்

12) பென்சோ[b]புளோரன்தீன் ( Benzo[b]fluoranthene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 19.518

தன்மைகள் - 9750 மடங்கு அதிகம்

13) பென்சோ[g,h,i]பெரிலீன் (Benzo[g,h,i]perylene)

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 5.151

தன்மைகள் - 2750 மடங்கு அதிகம்

14) டிபென்ஸ்[a,h]ஆந்த்ராசீன் ( Dibenz[a,h]anthracene )

- அளக்க முடியவில்லை

15) இண்டெனோ[1,2,3-சிடி]பைரீன் ( Indeno[1,2,3-cd]pyrene )

இருக்க வேண்டிய அளவு (குடிநீர் தரம்) - 0.002

ஆய்வு முடிவுகள் - 23.915

தன்மைகள் - 11,950 மடங்கு அதிகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com