பொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி

பொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி

பொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி
Published on

பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது. இதற்காக மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் 14ம் தேதி வரை 42 கல்லூரிகளில் உள்ள இணைய சேவை மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வர வேண்டிய நேரம் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சேவை மையத்திற்கு மாணவர்கள் சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், தகுதியுள்ள மாணவர்கள் கொண்ட தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மேலும், ஜீலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com