ஆம்பூர்: பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த உளவுத்துறை... காரணம் என்ன?

ஆம்பூர்: பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த உளவுத்துறை... காரணம் என்ன?
ஆம்பூர்: பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த உளவுத்துறை... காரணம் என்ன?

ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த மத்திய உளவுத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் பொறியியல் மாணவர் அனஸ்சலி. இந்த மாணவனை மத்திய உளவுத்துறை அதிகாரி சந்திரசேகரன், ஆய்வாளர் ஹரீஷ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவனிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து, அம்மாணவனிடம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், லண்டன், மொராக்கோ, போன்ற நாடுகளில் உள்ளவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் பேசியவர்கள் யார் என்று கோணங்களில் மத்திய உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com