ED ரெய்டு!
ED ரெய்டு!pt

அமைச்சர் கே.என்.நேருவின் மகன், சகோதரர் வீட்டில் ED ரெய்டு! சென்னையின் பல இடங்களிலும் சோதனை

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Published on

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கே .என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் நடத்தும் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவி வசிக்கும் சிஐடி நகர் இல்லம், தொடர்ந்து , அவர் நடத்தும் TVH Group கட்டுமான நிறுவனத்திலும், மேலும் அவருக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ED ரெய்டு!
தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்

மேலும், சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, MRC நகர் உட்பட 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com