\
ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை?

ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை?

ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை?
Published on

ஐ.என்.எக்ஸ்-மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பல வருடங்கள் சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தவர் டெல்லியில் வசித்து வரும் கே.வி.கே பெருமாள். இந்திராணி முகர்ஜி ஐ.என்.எக்ஸ்-மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக அளித்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் பெருமாளிடம் விசாரணை தொடங்கி ஏற்கெனவே நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்த பெருமாளின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துக்கள் குறித்தும், பெருமாள் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறலாம் எனத் தெரிகிறது.

இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், பெருமாளிடம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com