\
தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர்
தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர் முகநூல்

சென்னை | தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

சட்டவிரோத பணம் பறிமாற்றம் தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

முருங்கைக்காய் சிப்ஸ், சுட்ட கதை, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இவர், கடந்தாண்டு திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றியதாக, இவர்மீது பாலாஜி காபா என்பவர் புகார் அளித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால், ஒரு மாத காலம் சிறை தண்டை பெற்றநிலையில், தற்போது நிபந்தனை ஜாமீனில் ரவீந்தர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர்
’GOAT’ ரிலீஸ்ஆன பிறகு மிகப் பெரிய மாநாடு - தவெக முதல் மாநாடு எங்கே, எப்போது? விஜய்யின் திட்டம் என்ன?

இந்நிலையில், சட்டவிரோத பணம் பறிமாற்றம் தொடர்பாக சென்னை அசோக் நகரில் வசித்து வரும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com